இதை நடத்துவதற்கு பணம் இருக்கிறது. நன்றி!

மலர்ச்சி மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும்…

மலர்ச்சி வணக்கம்!

ஊரடங்கின் முதல் வாரத்தில் ஒரு நாள், மயிலை குளத்தினருகே பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்திருந்த சிலரை பார்க்கையில், ‘உணவு வேண்டுமே இவர்களுக்கு!’ என்ற எண்ணம் வந்து, ‘மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்’ வழியே முன்னெடுத்ததே, ‘உதவலாமே!’ வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு விநியோகித்தல்.

சேர்ந்து நாம் செய்வோம் என்று அறிவித்த உடன்,  முதலில் கை கொடுத்து பொறுப்பேற்றுக் கொண்டார்கள் சிலர். தொகை அனுப்பினர் சிலர். இப்படி சிலர் கைகோர்த்ததாலேயே நிகழ்ந்தது இது.  இவர்களுக்கு என் பிரார்த்தனைகள்!

இப்போதைக்கு பண உதவி தேவையில்லை. பணம் இருக்கிறது. வங்கிக் கணக்கில் பணம் அனுப்ப வேண்டாம். வேண்டுமாயின் நிச்சயம் தகவல் சொல்கிறேன். அப்போது கொடுங்கள்.  நன்றி!

ஃபேஸ்புக்கில் சில படங்களைப் பார்த்து விட்டு, நம்மைத் தொடர்பு கொண்டு, ‘எங்களால போக முடியல, நீங்க ஏற்கனவே செய்யறீங்க. நூறு மாஸ்க் அனுப்பறேன் மக்களுக்கு குடுங்களேன்!’ என்று அனுப்பி வைத்தார் அறிமுகமேயில்லாத டாக்டர் ஒருவர் (அதில் சில மாஸ்க்குகளில் ரஜினி மக்கள் மன்றம் பெயர் பொறித்திருந்தது)

ஊரடங்கு காலத்தில் காவலர்களுக்கு நான் பிஸ்கெட் தரும் செய்தியைப் பார்த்து விட்டு, மலர்ச்சி அலுவலகத்தில் கொண்டு வந்து 3 பெட்டிகளில் பிஸ்கட்டை இறக்கியிள்ளனர் சில மலர்ச்சி மாணவியர்கள்.   போதும்.  இவற்றை கொடுத்து முடித்தவுடன் சொல்கிறேன்.

பணம் அனுப்ப வேண்டாம். இவற்றை நிகழ்த்துவதற்கு பணம் இருக்கிறது. நன்றி!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
வாலண்ட்டையர் – ‘மலரச்சி மாணவர்கள் நற்சங்கம்’
03.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *