குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!:

குயவர்களும் குலாலர்களும் ஒன்றல்ல!:

1942ல் மத்திய சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு ராகுல சாங்கிருத்தியாயன் தன் பயணங் களின் ஆராய்ச்ணிகளின் அடிப்படையில் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை படித்துக் கொண்டிருக்கிறேன்.

கடைசி இந்து மன்னரான ஹர்ஷரது கதையில், பாணபட்டர் எழுதிய ஹர்ஷசரிதம், ரத்னாவளி, பிரதர்ஷிகா போன்ற நூல்களைக் குறித்தும், சீனப் பயணி யுவாங்சுவாங் வந்தது குறித்தும் ஹர்ஷரே பேசுவதாக வருகிறது. ஒரு இடத்தில் இப்படி வருகிறது.

‘என்னை வணிகர் குலம் என்று பின்னே பேசுகிறார்கள். நான் வணிகர் குலம் அல்ல. வைசிய சத்திரியர்கள் குலம். ஒரு காலத்தில் பாரதம் முழுவதிலும் எங்கள் சாதவாகனர்கள் குல ஆட்சியே இருந்தது. சாதவாகனர்களின் ஆட்சி அழிந்த பிறகு எங்களது முன்னோர்கள் கோதாவரிக் கரையிலிருந்த (ஆந்திரா) பிரதிஷ்டானபுரத்திலிருந்து ஸ்தானவீஸ்வரத்துக்கு (தானேஸ்வரம்) சென்று விட்டனர். சாதவாகன (சாலிவாகன) வம்சத்தினர் ஒரு போதும் வணிகர்கள் கிடையாது என்பது எல்லோரும் அறிந்தது. சக குலத்தைச் சேர்ந்த சத்திரியர்களோடு அவர்களுக்கு திருமண பந்தம் இருந்தது. என் அன்புக்குரிய மகாஸ்வேதாவும் பாரசீக அரச வம்சத்தைச் சேர்ந்தவள்தானே…’

இது ஹர்ஷர் குறித்து ஆய்வு செய்யப்பட்ட அவரே சொல்வது போல வரும் வரிகள். ஆந்திர கோதாவரிக்கரையில் இருந்த சாவாகனர்கள் ஆட்சி இழந்ததும் தானே (மகாராஷ்டிராவுக்கு) புலம் பெயர்ந்தனர். சாலிவாகன அரசர்கள் என குறிப்பிடுகிறது வரலாறு இவர்களை.

இங்கே ‘குலாலர்கள்’ சிலர் தங்களை சாலிவாகனன் வம்சம் என்றும் சாலிவாகனன் அரசை மறுபடியும் அமைப்போம் என்றும் பரப்புரை செய்வதைப் பார்க்க நேரிடுகிறது.

தமிழகத்தில் இருந்த ஆதி மக்கள் குயவர்கள் என்றே வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளனர். குலாலர்கள் என்பவர்கள் வேறு. எப்படியோ சாதீய / இன அட்டவனையில் இரண்டையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளனர் என்று தோன்கிறது.

சங்ககாலத்திலும், அதற்கு முன்னரும் கூட சமூகத்திற்கும் உலகிற்கும் மண்ணை குழைத்து பாண்டம் செய்து தந்த, 12 ஆம் திருமுறையின்  திருநீலகண்ட நாயன்மாரை குல முன்னோடியாகக் கொண்டவன் தமிழக குயவன். சாலிவாகன சந்ததியர்கள் எனப்படும் ஆந்திர – தானேஸ்வரத்தை மூலமாகக் கொண்ட வைசிய சத்திரியர்கள் எனப்படும் குலாலர்கள் என்று பார்க்க முடிகிறது.

குயவரும் குலாலரும் ஒன்றல்ல.

– பரமன் பச்சைமுத்து
06.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *