மேகமலை புலிகள் காடு காக்கப்படட்டும்

ஒரு பக்கம் கோவை மாவட்டம் கல்லாறு பகுதியின் யானை வலசைப் பாதையிலுள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை காடாக அறிவித்து காடுகளை விலங்குகளை பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காக்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர்.

மறுபக்கம் சத்தமில்லாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் சரணாலய காடு பகுதியில் சாலை அமைக்கும் வேலைகள் நடக்கின்றன. இந்த சாலை அமைக்கும் அனுமதி கடந்த ஆட்சியால் கொடுக்கப்பட்டது.

நாட்டின் கவனம் முழுக்க நோய்த்தொற்றில் இருக்கும் போது, கடந்த மாதம் கூடிய தேசிய வனவிலங்குகள் ஆணையத்தின் நிலைக் குழு கூட்டத்தில் 25 முன்மொழிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவாம். அதில் சில காணுயிர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் என்று சாலை, கட்டிடம் அமைப்பதாம்.  நிச்சயம் பிரதமருக்கு தெரியாமல் இருக்காது இது. 

விலங்குகள் வாழும் பகுதிகள் பாதுகாக்கப் பட வேண்டும், அங்கே சாலைகளும் வாகனங்களும் வராமல் இருப்பதே பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் சூழலுக்கும் உதவும்.

அரசு காடுகளை மனித அத்துமீறல்களிடமிருந்து காக்கட்டும்.

வாழ்க!

– மணக்குடி மண்டு
11.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *