புனித வன முயற்சியை புவனம் போற்ற வேண்டும்

மக்கள் வாழும் ஊரின் புறத்தே ஒரு 50 ஏக்கர் நிலத்தில் 442 வகையான தாவரங்களையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் 18 நன்னீர்க்குளங்களையும் கொண்ட ஒரு காட்டை உருவாக்கி, அதில் 291 வகையான விலங்குகள் வசிக்கின்றன, அருகி வரும் அரிய விலங்கான சாம்பல் நிற இந்திய எறும்பு தின்னி, சாம்பல் நிற தேவாங்கு, புள்ளி கூழைக்கடா, புள்ளி வாத்து, வெள்ளை மார்பன் நீர்க்கோழி, பழுப்பு நிற கொக்கு போன்ற பறவைகள் சரணாலயமாகவே அது மாறி விட்டது, காட்டுக்கோழி, மங்கூஸ், உடும்பு, பனை அணில், பட்டாம் பூச்சி, தட்டான்கள் பெருகி வாழ்கின்றன என்றால் என்ன செய்வீர்கள் நீங்கள்? நான் எழுந்து நின்று மரியாதை செய்வேன் அதை அமைத்தவரை.

ஓசூரில் தங்கள் தொழிற்சாலைக்கருகே 50 ஏக்கரில் ‘புனித வனம்’ என்னும் பல்லுயிர்ப் பெருக்க சூழலியல் காட்டை உருவாக்கியிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.  

20 ஆண்டு கால உழைப்பாம். அதற்கென சூழலியல் வல்லுநர்கள் தினமும் பணி புரிகிறார்களாம்.

நான் செய்ய ஆசைப்படும் சங்கதியை ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தின் திரு வேணு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு….

மலர்ச்சி வணக்கம்!

– பரமன் பச்சைமுத்து
அண்ணா நகர்
19.06.2021

#SacredForest
#TVSSacredForest
#TVS
#Environment
#TN

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *