முத்து மாறி விட்டான்!

கண் விழிக்கும் காலை முதல்
கண் துஞ்சும் நள்ளிரவு வரை
கண நேரமும் மோடி நினைவே அவனுக்கு

ஏழு ஆண்டுகளாக எதிர்ப்பு
எதற்கும் எதிர்ப்பு
வடக்கென்றால் எதிர்ப்பு
‘வட’ என்று வருவதால் வடைக்கும் எதிர்ப்பு

சேவை வரி நிலுவை
சேமியா விலையேற்றம்
தடுப்பூசி  தருதல்
தடுப்பூசி பற்றாக்குறை
தடுக்கி எவரும் விழுதல்

பால் விலையேற்றம்
பாத்ரூம் குழாய் துடைப்பம்
பாடத்திட்டம்
பாதசாரிகள் பேண்டமிக் காலம்

எது நடந்தாலும் மோடி
எது நடவாவிட்டாலும் மோடி

ஒரு நாள், ‘எல்லாம் பேப்பர் அறிக்கை, எதுவுமே செய்யவில்லை’ என்பான்
ஒருநாள் ‘செய்வது எல்லாமே தவறு!’ என்பான்
முப்போதும் மோடியையே தின்பான்

மோடி! மோடி! மோடி!
முக்காலமும் மோடியென்றேயிருப்பதால்
உட்பெயர் வந்தது ‘மோடி’ முத்து என்று

நண்பர்கள் திகைத்தனர்
நலம் சொல்ல விழைந்தனர்
பதறிப் பகன்றனர்

‘இவ்வளவு எதிர்ப்பு உணர்ச்சி
உடல் உள்ளம் நலத்திற்காகாது! கொஞ்சமேனும் நல்லதை பாராட்டு!’

செவி மடுத்த முத்து
சிறப்பாக மாறி விட்டான்

நான்காண்டுகளுக்கும் மேலாய்
குறையே சொன்னவன்
நாற்பது நாட்களாய்
நிறையையே சொல்கிறான்
முத்து மாறி விட்டான்

முத்து மாறி விட்டான்
மோடி முத்துவாக இருந்தவன்
சுடலை முத்துவாக

ஸ்டாலினை மட்டும் பாராட்டுகிறான்!

– பரமன் பச்சைமுத்து
18.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *