ஓகத்தை கொண்டாடுகிறேன்

wp-16242665057132283860693803501635.jpg

ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி, தசையை உறுதியாக்கும் எடை பயிற்சி, நீச்சல் பயிற்சி என பலவற்றை மாற்றி மாற்றி செய்து பழகுபவன் நான். யோகப்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் அந்த ஒரு நிலையை வேறெந்த உடற்பயிற்சியும் தருவதில்லை என்பதை உரக்கவே சொல்வேன்.

உடலையும் உள்ளத்தையும் ஒரு நிலையில் ஒன்றினைக்கும் என்பதால் அது ‘ஓகம்’, அதற்கான பயிற்சிகளுக்கு ‘இருக்கை’ எனும் (ஆதனம்) ஆசனம், அடுத்த நிலை உயர்வுக்கு மூச்சுப்பயிற்சி என யோகா தருவது அளவிடமுடியா அனுபவிக்க மட்டுமே முடிந்த அனுபவம்.

செய்வதற்கு மனமும்,அவரவர் உடலும், கொஞ்சூண்டு இடமும் இருந்தால் போதும் யோகப் பயிற்சி செய்வதற்கு. இதோ குளோபல் மருத்துவமனையின் வண்டி நிறுத்த வளாகத்தில் செய்ய முடிகிறது பாருங்கள்.

திருமூலராலும் முந்தைய முன்னோர்களாலும் ஓகம் எனப்பட்ட யோகம் இந்திய மண் உலகிற்களித்த ஓர் உன்னதம். ‘உலக யோகா தினம்’ என்று ஒன்றை முன்னெடுத்து, அதை உலக நாடுகள் ஏற்கொண்டது நல்ல சங்கதி. இதை எந்தக்கட்சி எந்த ஆட்சியாளர் செய்திருந்தாலும் வரவேற்பேன், கொண்டாடுவேன், என் குவியம் யோகா என்பதால், எவர் முன்னெடுத்தது என்பது இல்லை என்பதால்.

உலக யோகா தின வாழ்த்துகள்!

உறுதியாக உடல் வளர்ப்போம், உயிர் வளர்ப்போம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
குளோபல் மருத்துவமனை வளாகம்,
பெரும்பாக்கம்.
21.06.2021

#Yoga
#InternationalYogaDay
#YogaDay

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *