நேற்று மாலை (27.06.2021) நாம் கொண்டது நல்ல வளர்ச்சிப் பாதை.

‘பரமன், ஒரு குழப்பத்தோடே உட்கார்ந்தேன் லைவ் வளர்ச்சிப் பாதையில். எனக்கு தேவையானதை எப்பவும் குடுக்கற மாதிரி நேற்றும் அள்ளித் தந்தது வளர்ச்சிப்பாதை. எனக்காகவே எடுத்தது போல இருந்தது. நன்றி!’

‘இது என்னது இது! எங்க வீட்டுக்குன்னே எடுத்தது மாதிரி இருக்கு!’

‘தேவையான நேரத்தில் தேவையானதை தந்தது வளர்ச்சிப் பாதை. நன்றி பரமன்!’

‘ஏன் நட்சத்திரம் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன்!’

நேற்றிரவும் இன்று காலையும் எனக்கு வந்த பகிர்வுகளில் அதிகம் வந்தவை இவ்வகை பகிர்வுகளே. மலரவர்களுக்கு வேண்டியவற்றை சரியான நேரத்தில் கொடுத்துவிடும் மலர்ச்சி மாயம் இறையருளால் நிகழ்கிறது.

நேற்று மாலை (27.06.2021) நாம் கொண்டது நல்ல வளர்ச்சிப் பாதை. நிறைய பேர் தெளிவு கொண்டதாக குறிப்பிடுகிறார்கள். இதுவரையில் 1000 பேர் பார்த்துள்ளனர். திவ்யா, கே ஜி தங்கவேல், தேன் சரவணன், ஷர்மிலா, பிரபாவதி லோகநாதன், வாகினி, ராஜேஷ் ராமலிங்கம், அனீஸ் அக்காலநேணி, செந்தில் ஜே, தனபாலன், அசோக்நிலா, ஸ்ரீனிவாச ராகவன், ராஜலக்ஷ்மி, ராதா கிருஷ்ணன், அணு சுசிலா, சதீஷ் ஸ்ரீராமுலு, சுபம் பிரிண்டர்ஸ், எல்லப்பன், கிரிதிக், நந்தகுமார், கிருபாயினி, லதா ராமலிங்கம், அழகப்பன் அபி, பகீரதன் என பார்வையாளர்களின் கமெண்ட்டுகளை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கையில் ஒவ்வொருவர் கொண்ட புரிதலும் வளர்ச்சியும் புரிகிறது. மகிழ்ச்சி!

நீங்கள் மட்டுமே என்னைப் பார்க்கும் இந்த நிலையிலிருந்து, நானும் உங்களைப் பார்க்கும் படியான ஜூம் மீட் வழியாக சில வகுப்புகள் கொள்ளலாமென ஓர் எண்ணம் உள்ளது. புதுச்சேரி, திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு முதலில் இது செய்து பார்க்கப் படலாம்.

சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நல்லது.

உங்கள் கற்றலை, உங்களது வளர்ச்சியை எனக்கு பகிருங்கள்.
வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
28.06.2021

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *