கத்தாழை கார்த்திக்ராஜாவுக்கு மலர்ச்சி வணக்கம்

ஆன் லைன் பள்ளி வகுப்புகளை குறைந்த அளவே இணைய சேவையுள்ள சிற்றூரில் உள்ள மாணவர்கள் சாதாரன பட்டன் ஃபோனில் கவனிக்க என்ன செய்யலாம்? பெருகல்வியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தர வேண்டிய அந்த தீர்வை, ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் தந்தால், ஒரு கல்வி ரேடியோவைத் தொடங்கி நிகழ்த்தித் தந்தால் கொண்டாடுவோம்தானே!

தனது வகுப்பு மாணவர்கள் 15 பேருக்காக ஓர் இணைய தள வானொலியைத் தொடங்கி, அப்படியே பள்ளியின் மற்ற வகுப்புகளுக்கும் பரவி, இதைக் கேள்வியுற்று தமிழகம் முழுவதும் 75 ஆசிரியர்களும் இதை  ஓராண்டாகப் பயன்படுத்தும் படி செய்த அந்த ஆசிரியருக்கு… மலர்ச்சி வணக்கம்.

தனது சொந்தப்பணத்திலும் சிலரது உதவியிலும் இவர் தொடங்கிய ‘கல்விரேடியோ’, இதுவரை 2.25 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ப்ளேலிஸ்ட் வசதி இருப்பதால் திரும்பத் திரும்ப பாடங்களை கேட்கலாம் மாணவர்கள் என்பது சிறப்பு வசதி.

கடலூர் மாவட்டம் கத்தாழை ஒன்றியத்தின் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆ கார்த்திக்ராஜா அவர்களே அந்த நாயகர்.

இது போன்ற ஆசிரியர்களை, குறிப்பாக இந்த கத்தாழை கார்த்திக்ராஜாவை அரசு கவனிக்க வேண்டும். இந்த கல்விரேடியோவை அப்படியே மாநிலம் முழுக்கவும் கூட கொண்டு செல்லலாம்!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
30.06.2021

Facebook.com/ParamanPage

#KathazhaiSchool
#TeacherKarthikRaja
#KathazhaiGovtSchool
#GovtSchoolTeacher
#KalviRadio
#Inspiration

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *