சரியான ஆட்களை சரியான இடங்களில் நியமிப்பதால்…

நன்னீர்க் கொசுக்கள், கழிவு நீர்க் கொசுக்கள் என இரண்டு வகைகளாலும் பாதிக்கப்படும் சென்னையில், கொசுக்களை ஒழிக்கவும் தொற்றுகளிலிருந்து மக்களை காக்கவும் பெருநகராட்சி எப்போதுமே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உண்டு.

இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதகளில் 15 நாட்களுக்கு சோதனை முறையில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். மருந்து தெளிக்கும் முன், தெளித்த பின் என முட்டை – லார்வா – புழுக்களை சோதித்து முடிவு செய்ய இறங்கியிருக்கிறார்கள்.

பெருநகராட்சியின் வழிகாட்டுதலில் உர்பசர் நிறுவனம் நிகழ்த்தும் இந்த சோதனைகளை முன்னெடுத்தவர், ககன் தீப் சிங்.  இவர் சென்னைக்கு மாற்றலாகி வரும் போதே இப்படி சிலவற்றை எதிர்பார்த்தோம்.

சரியான ஆட்களை சரியான இடங்களில் நியமிப்பதால் நல்ல முன்னெடுப்புகள் நிகழும் என்பதன் சமீபத்திய உதாரணம் இது.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
02.07.2021

#GreaterChennai
#CleanChennai
#TN

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *