நிறைய நல்லது செய்ய முனையும் ஸ்டாலின் அவர்களின் அரசு இதை கவனிக்க வேண்டும்.

நீட் தேர்வு பற்றிய சர்ச்சையும் வழக்கும் போராட்டமும் வெகுநாட்களாக நடக்கின்றன என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் என்ற திட்டங்களை செயல்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்தது முந்தைய அரசு.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்குவோம் என்று தேர்தலில் சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய அரசால் நீட் தேர்வை சொன்னபடி உடனே நீக்க முடியாது என்பது சாமானியனுக்கும் புரிந்த வேளையில், நீட் தேர்வு  சம்மந்தமாக ஓர் ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது புதிய அரசு. எல்லா முயற்சிகளும் நடக்கின்றன. ‘இப்போதைக்கு நீட் தேர்வுக்கு நீங்கள் தயாராகித்தான் ஆக வேண்டும்!’ என்று சொல்லியும் விட்டார் அமைச்சர் மாசு.

ஆனால்… அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களை வைத்து தரப்பட்ட ‘நீட் கோச்சிங்’ வகுப்புகள் இப்போது நடப்பதில்லை.  நீட் தேர்வும் உண்டு, கோச்சிங்கும் இல்லை என்ற நிலையில் அரசுப் பள்ளி் மாணவர்கள் நிலை என்னவாகும்!?

நிறைய நல்லது செய்ய முனையும் ஸ்டாலின் அவர்களின் அரசு இதை கவனிக்க வேண்டும்.

– மணக்குடி மண்டு
05.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *