தட்டைப் பார்க்கையில்…

‘படக் படக்’கென குதிகாலில் அடிக்கும் ரப்பர் வார் செருப்பையும் அரைக்கால் சட்டையும் அணிந்து கொண்டு புவனகிரி கடைத்தெரு வழியே பெருமாத்தூர் ஆண்கள் பள்ளிக்கு அர்ச்சுனனோடும் சரவணனோடும் போன காலத்தில், ராமலிங்கசுவாமி மடத்திற்கெதிரே இருந்த உணவகப் பலகையில் ‘பூரி சாம்பார் 50 பைசா’ ‘பூரி கிழங்கு 60 பைசா’ என்று எழுதியிருந்தவையும், ‘என்னைக்காவது ஒரு நாள் எப்படியாவது இந்த பூரியை சாப்டு பாக்கனும்!’ என்று சொல்லிக்கொண்டதும் நினைவில் வந்து நிற்கிறது, இன்று காலை சாப்பிட உட்காருகையில் தட்டில் மனைவி பறிமாறிய பூரியைப் பார்க்கையில்.

பூரி கிழங்கு!

– பரமன் பச்சைமுத்து
11.07.2021

#Bhuvanagiri
#GovtBoysHigherSecSchool

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *