நாடே கவனிக்கிறது உங்களை!

தொடங்குகிறது நாடாளுமன்றம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேளாண் மசோதா, மருத்துவக் கட்டமைப்பு, நீட் தேர்வு என விவாதங்களில் இறங்கி கேள்விகளால் அரசை திக்குமுக்காட வைக்கட்டும் எதிர்க்கட்சிகள். மக்களின் மீதான நாட்டின் மீதான உண்மையான அக்கறை அது.

இவற்றைத் தவிர்த்து கூச்சல், அமளியில் ஈடுபட்டு செயல்பட தடுப்பது, ரஃபேலை எடுத்துக் கொண்டு கத்துவது என செயல்படாமல், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.

செயல்பட விடாமல் அமளியில் இறங்கினால், விவாதம் நடக்காது, மோடி அரசு அதைப் பயன்படுத்தி விவாதமே இல்லாமல் நேரடியாக மசோதாக்களை அமல் படுத்திவிடும், வேளாண் மசோதாவில் நடந்ததைப் போல. ‘விவாதிக்கவே இல்லை. ஃபவுல் ஃபவுல்!’ என்று பின்னாளில் கத்துவதில் பயனில்லை. இன்று விவாதியுங்கள்.

கருத்துகளை முன் வையுங்கள். திக்குமுக்காட வையுங்கள். நாடாளுமன்ற நிகழ்வின் தரத்தை உயர்த்துங்கள்.

நாடே உங்களை கவனிக்கிறது.

வாழ்க!

– மணக்குடி மண்டு
19.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *