மெட்ராஸ்

‘மெட்ராஸ்’

சிறு வயதில் போதையேற்றிய எங்கோ தூரத்திலிருந்த, ‘ஒரு நாளு அந்த ஊரைப் போய்ப் பாக்கனும்!’ என்று ஆசையூற வைத்த ஒரு கனவு நகரம்.

‘மெட்ராஸ்’ – பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்கேற்ப வழுவிச் சூட்டிய பெயர். மெட்ராஸ் சென்னையாக மாறிக்கொண்டிருந்ததை கண்ணெதிரே கண்ட தலைமுறையில் நானும் ஒருவன்.

மவுண்ட்ரோடு, ஜெமினி ஃப்ளை ஓவர், ஏவிஎம் ஸ்டுடியோ, சஃபையர், லிபர்ட்டி, அலங்கார், சாந்தி தியேட்டர், சன் தியேட்டர், பைலட், மத்திய சிறைச்சாலை, ச்சேமியர்ஸ் ரோட், மௌபரீஸ் ரோட், ட்ரைவ் இன் உட்லண்ட்ஸ் என எல்லாம் போய் அடையாளங்கள் மாறி சென்னையாக மாறி நிற்கும் வேளையிலும், பன்னாட்டு விமான இயக்கம் (மெட்ராஸ் ஏர்போர்ட் MAA ) கொண்டிருப்பதைப் போல, சில இடங்களில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது ‘மெட்ராஸ்’

இதோ அண்ணாநகர் மெட்ரோ ஸ்டேஷனின் வெளியே இருக்கும் காஃபி கடையிலும் ‘மெட்ராஸ்’

எனக்கு மெட்ராஸும் பிடிக்கும், காஃபியும் பிடிக்கும். உங்களுக்கு?

  • பரமன் பச்சைமுத்து
    19.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *