500 ஏரிகள்

சுற்றியுள்ள 500 ஏரிகள், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி சென்னையின் குடிநீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அறிவித்திருக்கிறார்.

இது மட்டும் சரியாக செயல்படுத்தப்பட்டால் சென்னைக்கு மட்டுமல்ல நாளைய தமிழகத்திற்கே நல்லதாக அமையும். வீராணத்திலிருந்து குழாய்களில் சென்னைக்கு கொண்டு வருவதை நிறுத்தலாம். அந்த உபரி நீர் கடலூர் மாவட்டத்தின் வேறு பயன்பாட்டிற்கோ நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கோ பயன்படலாம்.

இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தி விட்டால், நான் போற்றவே செய்வேன் இந்த அரசை.  நம்புவோம்! நல்லது நடக்கட்டும்!

– பரமன் பச்சைமுத்து
25.08.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *