வெள்ள நீர் வடிகால் பணிகள் – சபாஷ்!

பாடி மேம்பாலத்திற்கு வடமேற்கேயுள்ள கொரட்டூர் போன்ற தாழ்நிலை பூமி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ‘எல்லா தெருவையும் தோண்டி தோண்டி போட்டுறாங்க. வண்டி போக முடியல’ என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால், சங்கதி வேறு.

வெள்ள நீர் வடிகாலுக்காக பெரிய ஆழ் குழாய்கள் பதிக்கும் வேலை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவ்வளவு வேகமாகவும் தொடர்ந்தும் பணி நடந்ததை சமீபத்தில் நான் பார்த்ததேயில்லை.

பெருநகர் முழுக்க பல இடங்களில் இப்படி பணிகள் நடைபெறுவதாக அறிகிறேன்.

தமிழக அரசும் அதிகாரிகளும் மழைக்கு முன்னே செய்ய வேண்டியதை சிறப்பாக செய்வதாக உணர்கிறேன்.

தமிழக முதல்வர், கடலூர் மாவட்டத்தில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்ட ககன் தீப் சிங் பேடியை இழுத்து வந்து சென்னை பெருநகரில் விட்ட போதே, சிலவற்றை எதிர்பார்த்தோம். ஒவ்வொன்றாக கண்ணில் தெரிகிறது இப்போது. சரியான ஆட்களை சரியான இடத்தில் நியமிப்பதிலேயே தொடங்குகுறது நிர்வாகத்தின் வெற்றி!

சபாஷ்!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
26.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *