முதல் நாள்

படித்து தேர்வாகி  வென்று வேலைக்கு போவது ஓர் உணர்வு என்றால் நம் பிள்ளைகள் வேலைக்கு போவது வேறொரு நிலை, வேறோர் உணர்வு.

தனது ப்ரொஃபஷனல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் என் மகள், இண்ட்டர்ன்ஷிப்பிற்காக ஒரு நிறுவனத்தில் சேரும் முதல் நாளான இன்று நாமே சேர்வது போல பயபக்தியோடு போய் அவளை விட்டு வந்தேன்.

‘இட்ஸ் ஓக்கேபா!’ என்று மகள் சொன்ன போதும் கூட, இறங்கி ஆறாவது மாடியில் இருக்கும் அலுவலகம் வரை சென்று பார்த்து விட்டு விட்டு வருகிறது ‘தகப்பன் மனசு’.

‘இதென்ன பெரிய மேட்டர்!’ என்பவர்களுக்கு, தந்தையாக இந்த நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே இது புரியும்!

இன்று எனக்கும் முதல் நாள். மலர்ச்சியில் முதல் முறையாக குறைந்த கட்டணத்தில் புது ஆன்லைன் கோர்ஸ் முயற்சிக்கிறோம். முதல் ‘உள்ளே கனல்’ – ஆன் லைன் மலர்ச்சி கோர்ஸ் இன்று தொடங்குகிறது.

இறைவன் துணை செய்யட்டும்!

– பரமன் பச்சைமுத்து
27.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *