பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள்.

உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது.

பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே சீர் குலைந்தது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்லகின்றன.

இந்த நிலையில் 1 ஆவதிலிருந்து 8வது வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. நல்ல முடிவாக கருதுகிறேன் இதை.

நேரடியாக முழுநாளும் பாடங்கள் என இறங்காமல்,
உடற்பயிற்சி விளையாட்டுக்கு முதன்மை தந்து கொஞ்சம் கொஞ்சமாக பாட நேரங்களை கூட்டலாம்.

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    29.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *