புலம் பெயர்ந்தோர் நலம்

பிழைப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு என திட்டங்கள் அறிவித்து அசத்தியிருக்கிறது தமிழக அரசு! வாழ்க!  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுத்தருதல், அங்குள்ள ஆசிரியர்களை தமிழ் கற்ற ஊக்கப்படுத்துதல் என்பன மிகச் சிறப்பானவை. அதே மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் மொழித் தொடர்பு அற்றுப் போன அந்த சந்ததியினருக்கு இது பெரும் நன்மை செய்யும்.

இதை வெளிநாட்டில் மட்டும் செய்யாமல் இந்தியாவின் வெளி மாநிலத்திலும் செய்ய வேண்டும் தமிழக அரசு. கோலாரிலும், பெங்களூருவிலும், ஆந்திராவிலும், மகாராஷ்ட்ரிராவிலும் என இந்தியாவெங்கும் பரவிக் கிடக்கிறார்கள் பணிக்காக சென்று அங்கேயே குடியமர்ந்து விட்ட தமிழர்கள். அந்தத் தமிழர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் தமிழ் கற்க ஆசை உண்டு, ஆனால் வழியில்லை. அவர்களுக்கும் இச் செம்மொழி அதன் அசலான வடிவத்தில் கிடைத்தால்… ஆகா, எவ்வளவு நல்லது!

உதவி செய்யட்டும் தமிழக அரசு.

– பரமன் பச்சைமுத்து
12.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *