சென்னை – ReEngineering

இப்போது ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு அவகாசம் தேவை என்பதை உணர்வோம்.

சென்னையில் 16 நீர் வழித்தடங்கள் உள்ளன, அவற்றை முறையாக தூர்வாரவில்லை, ஒவ்வோர் ஆண்டும் 500 கோடி அதற்காக ஒதுக்கப் படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இவர்கள் அவர்களை கை காட்டுகிறார்கள். பதிலுக்கு ‘மத்திய அரசு தந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இவ்வளவு கோடி செலவு செய்யப்படுட்டது. வில்லிவாக்கம் ஏரி அந்தத் திட்டத்தில்தான் புனரமைக்கப் பட்டது’ என்கிறார்கள் முந்தய ஆட்சியாளர்கள்.

‘களத்துல டக்குன்னு இறங்கி வந்து நிக்கறாரு பாரு முதல்வர்!’ என்கிறார்கள் ஆளுங்கட்சியினர். ‘எம்ஜியார், ஜெயலலிதா, எடப்பாடி,கலைஞர், ஒபிஸ் எல்லாருமே அப்படி நின்னவங்கதானே! பாருங்க!’ என்று படங்களை பகிர்ந்து ஆதாரம் காட்டுகிறார்கள் எதிர்கட்சியினர்.  ‘எல்லா நேரங்களிலும் வெள்ளம் சேர்ந்தா போய் நிக்கறாங்க. ஆய்வு பண்றாங்க, சரிதான்! ஆனா… மேயரா இருந்தாங்க, எம்எல்ஏவா இருந்தாங்க, எதிர்க்கட்சி தலைவரா இருந்தாங்க, அப்புறம் இப்ப முதல்வர்… இப்பயும் அப்படியேதானே இருக்கு நிலைமை. ஆய்வு பண்ணிட்டே இருக்காங்களே!’ என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ககன்தீப் சிங் மேற்பார்வையில வெல்ல நீர் மேலாண்மை வேலைகள் நடந்தன. கொரட்டூர் பகுதிகளில் தோண்டி குழாய் பாதிக்கும் வேலைகள் நடந்தடதை நானே பார்த்தேன். அதைப் பற்றியும் எழுதினேன்.

சென்னையின் நீர்நிலைகளையும் சென்னையோடு ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றியுள்ள பகுதிகளின் நீர்நிலைகளையும் சேர்த்தால் அவற்றி்ன் கொள்ளளவு  150 டிஎம்சி தண்ணீராம்.  சென்னையின் ஒரு மாத அதிக பட்ச தேவை 1 டிஎம்சி.

ஏன் இத்தனை ஆண்டுகளாய் வந்தவர்கள் பண்ணவில்லை என்பதையெல்லாம் விட்டுவிடலாம். இதுதான் நிலைமை.

இப்போது வந்திருக்கும் முதல்வர் அடுத்த ஆண்டுக்குள் இவற்றை சீர் செய்துவிட்டால், சென்னையின் வரலாற்றில் நிறைந்து நிற்பார். ஆந்திரர்களின் தயவில் கிருஷ்ணா நதி நீரும், கடலூர் மாவட்டத்திலிருந்து வீராணம் நீரும் தேவைப்படாது.  வெள்ள நீர், குடிநீர்த் தட்டுப்பாடு இரண்டிலிருந்தும் காக்கப்படுவோம்.

– மண்டு
10.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *