நீலம் – நாவல் வடிவில் பாகவதம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக படித்தும் செவி வழி கதைகள் கேட்டதுமன்றி பாகவதத்தை முழுதுமாக இதுவரை வாசித்தில்லை நான். பாகவதத்தை உள்வாங்கி நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் நண்பர் மதுவின் பரிசாக நம் வாசல் வந்து சேர, பாகவதம் விரிகிறது என் முன்னே என்னுள்ளே.

சில அத்தியாயங்கள் படித்ததுமே வியப்பில் உறைந்து கீழ்வருவனவற்றை சொல்கிறேன்:

1. தெரிந்த கதைகளின் அறியாத விவரங்களை அடுக்கி ஆழப்படுத்தி விரிகிறது நாவல். 
2. அதைவிட குறிப்பாய் இந்த நூலின் நடையில் தமிழில் சொக்கிப் போகிறேன்.
3. வைணவம் விரும்புவோர், கண்ணனை போற்றுவோர், தமிழ் அறிந்தோர் படித்துத் திளைக்கலாம் இதை.  (ஆரியம் திராவிடம் பேசுவோரும் நாத்திகரும் கூட திறந்த மனதிருந்தால் இதன் தமிழில் திளைக்கலாம், வைரமுத்து கம்பனை சிலாகிப்பது போல)

மேலுள்ள எந்த நோக்கும் இல்லாமல், இது அப்படியென்று கூட அறிந்திராமல் இருந்தவனிடம் இந்நூல் கொடுக்கப்பட்டதால் படித்துத் திளைக்கும் வாய்ப்பு பெற்றேன். எனக்கு கிடைத்தது உங்களுக்கும் கிடைக்கட்டுமேயென பகிர்கிறேன்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
11.11.2021

#Neelam

#Jemo

#JeyaMohan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *