92 பேட்ச் சரவணக்குமார்

🌸

முதல் முறை சந்திக்கும் போதே பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்த உணர்வு வந்துவிடுகிறது சிலரை சந்திக்கும் போது.
ஏவிசிசிபி 92 பேட்ச்சின் சரவணக்குமார் உடன் ஆன சந்திப்பு அப்படியே இருந்தது.

வளைகுடாவிலிருந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தவர், மலர்ச்சி அலுவலகம் வந்து நம்மை சந்தித்து இன்ப அதிர்ச்சி தந்தார்.

ஏவிசி பாலிடெக்னிக்கில் படிக்கும் போது குத்தாலத்திலிருந்து தினமும் வந்து படித்தாராம். 92 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் கிருஷ்ணப்பிரியாவும் (நல்லா ஞாபகம் இருக்கே பாஸ்!) அவரும் ஒன்றாக பஸ்ஸில் வருவார்களாம்.

சிவில் டிபார்ட்மெண்ட்டில் அமிர்தகணேசன் சார் மட்டுமே நினைவில் இருக்கிறார் எனக்கு.

ஏவிசிசிபி, அடுத்து சென்னையில் வேலை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், எல் அண்ட் டி, யு ஏ இ என அவரது பயணம் பற்றி அறிந்தது நன்று.

23ஆம் தேதி வரை இந்தியாவில் இருக்கிறார் சரவணக்குமார்.

‘என் எழுத்துக்களை, என் பகிர்வுகளை இத்தனை நாளாய் இவ்வளவு ஆழமாக கவனிக்கிறாரே இவர்!’ என்று வியப்பை ஏற்படுத்தினார் சரவணக்குமார்.

நிறைய பேசினோம், நிறைய பகிர்ந்து கொண்டோம். ஆனாலும் இன்னும் தொடர்வோம் என்ற உணர்வோடே இருவரும் கிளம்பினோம் திருமங்கலம் மெட்ரோ ஸ்டேஷனில்.

  • பரமன் பச்சைமுத்து
    16.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *