மைக்ரோப்ராஸர் ட்ராஃபிக் சிக்னல் – ஏவிசிசி

இன்று காலை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னலில் நின்ற போது, வண்டிகளில் இருக்கும் உலோகங்களை வைத்து எடையைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் நிறைய வண்டிகள் எனக் கணக்கிடும், கல்லூரியில் படித்த ‘மைக்ரோப்ராசர் கன்ட்ரோல்டு எலக்ரானிக் வெய்யிங் ட்ராஃபிக் சிக்னல்’ நினைவுக்கு வர, மனதில் இடிசி லேப், அந்த வி ஐ மைக்ரோ மைக்ப்ராசர் கிட் எல்லாம் நினைவுக்கு வந்தது.

‘ஷூ போடலன்னா லேப்புக்கு வரக்கூடாது!’

‘எர்த்திங், ஸ்டாட்டிக் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு கிட்டை தொடனும்’

8085

Z80

ADD

SUBSTRACT

DIV

MULT

PRINT

கடைசி வரை மைக்ரோப்ராஸசர் கோடிங் கற்றுக் கொள்ளவேயில்லை நான். தியரி ஓரளவு புரிந்து ஒப்பேற்றி விட்டேன்.

பின்னாளில் ரைட்சாஸ்ஸில் நாவல் நெட்வேர் – நெட்வொர்க் இஞ்சியனியராக இருந்த போது, அஸெம்ப்ளி லாங்க்வேஸ் ப்ரோக்ராமிங் கற்றுக் கொண்டு டாட் காம் ப்ரோக்ராமெல்லாம் எழுதினேன். க்ளிப்பர் கற்றுக் கொண்டு எக்ஸிக்யூட்டபள் எல்லாம் செய்தேன்.

டாஸ் 3.0, 5.0, என்-டாஸ் 8, என வளர்ச்சி வந்து விண்டோஸ் 3.11 வந்ததிலிருந்து துறை மாறத் தொடங்கியது. விண்டோஸ் 95ம், விண்டோஸ் என்ட்டி 4.0ம் வந்த பிறகு எல்லாமே மாறிப் போனது. ப்ரோக்ராமிங் பக்கம் போகவேயில்லை. சன் சோலாரிஸ் அட்மின் ஆகி, லினக்ஸ் சர்வரில்அப்பாச்சி வெப் சர்வர் அட்மின் செய்த போது திரும்பவும் கமெண்ட்ஸ் – ப்ரோக்ராம் தேவைப்பட்டது. இந்தியாவிலேயே 6 மணி நேர ‘ஆர் ஹெச் சி இ’ முடித்த சிலரில் நானும் என ரெட்ஹாட் சர்ட்டிஃபிகேஷன் கூட வென்றேன்.

ஆனாலும், அந்த இடிசி லேப்பும், மைக்ரோப்ராசர் கோடிங்கும் புரியாமலேயே கடந்து விட்டேன். தேர்வுக்குத் தேவையானதை மட்டும் கற்று தேர்ச்சி பெற்று மறந்து விட்டேன்.

முருகவேள், நாதமுனி, முரளிப்பிரகாஷ், முருகன், முத்து, பரமன் என்பது லேப்மேட் டீம் அப்போது என்பதாக நினைவு.

அண்ணா நகர் சிக்னல் கடந்து ஷெனாய் நகரில் நுழைந்து அலுவலகம் வந்து விட்டேன்.

  • பரமன் பச்சைமுத்து
    20.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *