சத்தம்

அருகிலுள்ள ஏதோவொரு வீட்டிலிருத்து முகந்தெரியா மனிதரொருவர் ‘ஆ…’வென்று செய்யும் யோகா உச்சாடனம்

பக்கத்து மனை கிணற்றடியில்
வேலைக்கார பாட்டியம்மா பாத்திரம் கழுவையில் எழும்
‘களங் ப்ளங் டங்’

குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே பக்கத்து வீட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் சொல்லும், ‘ஆங்… நான் பாத்துக்கறேன். போங்க!’

பலகணிக்கு வெளியே சோறு வைக்கப்பட்டதும் உற்சாகத்தில் தன் இனத்தை அழைக்க காகம் கரையும் ‘கா… கா…’

எதுவும் கேட்கவில்லை,
இன்று வெறும் மழை சத்தம்!

– பரமன் பச்சைமுத்து
22.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *