‘அப்பா….!  வாழ்த்துங்கள் அப்பா!’

wp-1639876840741.jpg

எவ்வளவு இருந்திருந்தாலும் ‘இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்!’ என்று நினைப்பதுதானே மனித மனசு!

இதுதான் அந்தக் கணம் இப்படியொரு கணம் வாய்க்காது இனி என்று முக்கிய கணங்களில் எவரேனும் சொல்லியிருந்தால் இன்னும் வாழ்ந்திருப்பேனே என எவ்வளவு வாழ்ந்த போதும் வழுக்கி விழுகிறது மனம்

வாழ்வதும், வாழ்ந்த கணங்களை எண்ணி வாழ்வதும் தொடர்ந்து மேலே வாழ்வதும்தானே வாழ்க்கை.

‘ச்சே! ஒரு முறை கூடத் திரும்ப பார்க்கவே முடியாதா!?’ என்ற விடை தெரிந்த கேள்வி எவரேனும் வேறு விடை பகர்வாரோவென தின்றெடுக்கிறது உள்ளத்தின் உள் பகுதிகளை.

தில்லை நடராசர் தேரிலேறும் அதே மார்கழி மிருகசீரிடத்தில் உடல் துறந்து சிவபுரத்துக்கு என் தந்தை தேர் ஏறி ஈராண்டுகளாம் இன்றோடு! 

வாழ்க்கைத் தேர் ஓடுகிறது, பல கைகள் வழி நடத்த.

எந்த எதிரிய உணர்வுமில்லை, இருந்தாலும் அழுகிறேன். ஆனாலும் பிடிக்கிறது நெஞ்சுக்குழியை அழுத்திப்பிடிக்கும், இந்த அழுகைக்குப் பின்னிருக்கும் ஆழம்.

‘அப்பா….!  வாழ்த்துங்கள் அப்பா!’

– பரமன் பச்சைமுத்து
மார்கழி மிருகசீரிடம்
19.12.2021

#MuPachaimuthuArakkattalai
#MuPachaimuthu

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *