வாழப்பாடி ஆசிரியர்: தட்றா கைய அவருக்கு!

எவ்வளவு படித்தாலும் எழுதினாலும்  பேச்சில் பயன்பாட்டில் இல்லாத மொழியில் சரளம் வராது. தமிழக மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் தவிப்பது இதனால்தான். உரையாடலை கொண்டு வந்து விட்டால் பழகப் பழக மொழி வசமாகும். 

பேசக் கற்றால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும் என்னும் வழியை அடிப்படையாக வைத்து, சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளியில் சிவக்குமார் என்னும் ஓர் ஆசிரியர் ஆங்கிலம் கற்க மாணவர்களுக்கு ஒரு வழியை உருவாக்கியிருக்கிறாராம்.  சுவர்களில் பல வித சித்திரங்கள், பொருட்களை பொருத்தி அதன் வழியே உருவாக்கப்படும் ஆங்கில உரையாடல் மாணவர்களிடையே பெரிய வளர்ச்சியை உண்டாக்குகிறதாம்.   நல்ல பலன் என்று பலரும் சொல்கிறார்கள்.

இது போன்ற ஆசிரியர்களை அரசு கவனிக்க வேண்டும். இத்தகைய திட்டங்களை மாநிலம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும்.

வாழப்பாடி ஆசிரியர் சிவக்குமார் அவர்களுக்கு… மலர்ச்சி வணக்கம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ்
20.12.2021

#VazhappadiSchool
#GovtSchool
#ArasupPalli
#VazhappadiSivakumar

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *