வணக்கம் பிள்ளையார்பட்டி

wp-1645200769336.jpg

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன்.

அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள். வணங்கிவிட்டு வெளியே வந்தால், ‘சாமி சன்னதிக்கு போவோம் வாங்க!’ என்றார்கள்.

‘சாமி சன்னதியா?!’

‘வாங்க பரமன் சார்!’

கொஞ்சம் நடந்து போனால் ‘அடேய்… தலைவன்!’ மருந்தீஸ்வரராம், லிங்கமாக!

‘அங்க போலாமா? ‘

‘அத தாண்டி போகக்கூடாது!’ என்று அவர் சொல்லும் போதே கயிறு தாண்டி உள்ளே போய் நெருங்கி நின்று விட்டோம்.

‘கழட்டுடா மாலையை, யாரு முன்னால நிக்கற நீ!’

எதுவும் சிந்திக்கும் முன்னே, கை கூப்புகிறது. எவர் பற்றியும் இடம் பற்றியும் கவலை இல்லாமல் வாய் சத்தமாக பாடுகிறது , ‘உலகெலாம் உணர்ந்து…’

🌸😁

– பரமன் பச்சைமுத்து, காரைக்குடி, 18.02.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *