பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸

‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன்.

(அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்)

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று போனால் மொத்தமும் ஒரே இடத்தில் வாங்கிக் கொண்டு வரலாம் என்பதோடு ஒவ்வொரு பொருளிலும் கொடுக்கப்பட்டுள்ள வகைகள், பரந்து விரிந்த இட வசதி, சேவை என சிந்தித்து சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

குழந்தையின் அரை நாண் கயிறு, பொம்மைகள் உட்பட, பெருநகர பெண்கள் சிலர் வடிவத்தை மாற்றிக் காட்ட தற்காலத்தில் பயன்படுத்தும் ‘டிஎஸ்என்’ வகை ‘உள்புற எலாஸ்ட்டிக் எக்ஸ்ட்ரா’ உடை வரை எல்லாமும் வைத்திருக்கிறார்கள்.

பட்டுக்கென்று இருக்கும் சிறப்புப் பிரிவில் துணி வாங்க வந்த பெரியகடம்பாடி கிராமத்து குடும்பத்தினரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘நிறைய கடைங்களை பாத்துட்டு நேத்து இங்க வந்தோம். நேத்தே பாத்துட்டோம், இன்னைக்கு கல்யாண துணி மணிங்க வாங்க வந்தோம்!’ என்று மகிழ்ச்சியாக பகிர்ந்தனர்.

‘சிறப்பான பார்க்கிங் வசதி இங்குதான்!’ என்றார் உடன் வந்த திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர். ‘மற்ற ஊர்ங்கள்ல இருக்கற பச்சையப்பாஸ விட இதுதான்சார் ரொம்ப பெருசு! 4 ஃப்ளோரு, இவ்ளோ பெருசு!’ என்றார் அங்கிருந்த ஊழியர்.

நூற்றுக்கணக்கான திருவண்ணாமலை சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பை தந்துள்ளது திருவண்ணாமலை கிளை பச்சையப்பா சில்க்ஸ் என்பது நான் கொண்டாடும் முக்கிய காரணங்களுள் ஒன்று.

தொழில் சிறக்கட்டும்! தொழில்கள் பெருகட்டும், நம் அனைவருக்கும் அது நல்லது. பிரார்த்தனைகள்.

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    திருவண்ணாமலை
    09.03.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *