மனோஜ்பவனில்

டிரைவருக்கு காலையுணவு, நமக்கு காப்பி!’ என்ற முடிவோடு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பாலம் கடந்து நிறுத்தி மனோஜ் பவனில் நுழைந்து, ஓர் இருக்கையில் ( ஓரிக்கை அல்ல, அது பெருமாள் இருக்கும் இடம்) அமர்ந்து, ‘சுடு தண்ணீர், காப்பி… பில்லு அந்த டேபிள்ள சாப்பிடறாரு பாருங்க அவர்ட்ட!’ என்று டிரைவரை காட்டி ஆர்டர் தருகிறேன்.

பித்தளை வட்டா தம்ளரில் காப்பி வரும் போதே, வேறொருவரும் வருகிறார்.

‘ஹலோ பரமன் சார்!’

‘ஆமாம்!’

‘நான் நந்தகுமார். எஸ்எஸ்எல்எஃப் ஸ்டாப்ஃ. சார் நீங்க எடுக்கற சேல்ஸ் க்ளாஸ் எங்களை ஓட வுடுது சார். மார்ப்கெட் வேற மாதிரி புரியுது சார். இப்பக் கூட ஒரு ரெஜிஸ்ட்ரேஷன்தான் போயிட்டு இருக்கேன். ரெஜிஸ்ட்ரேஷன் வந்த ஃபேமிலி அங்க டிஃபன் சாப்படறாங்க. ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணப் போகையில உங்கள பாத்தது இன்னும் சந்தோஷம் சார்!’

‘ஆகா! வாழ்க!’

‘சார் ஒரு ஃபோட்டோ!’

‘இங்க லைட் இல்ல. வெளியே போவோம் வாங்க!’

எழுந்து நடக்கிறோம்!

பின்பக்கமிருந்து ‘சார்! காப்பி ஆறுது!’

‘இருக்கட்டும்மா! இவங்களுக்கு ரெஜிஸ்ட.ரேஷன் நடக்கப்போவுது. வாழ்த்தி அனுப்பனும்!’

….

நந்தகுமாரை வாழ்த்தி அனுப்பிவிட்டு இருக்கைக்கு வருகிறேன் காப்பி குளிர்காப்பியாகி இருந்தது.

நம் மலர்ச்சி மாணவர்.சக்தியின் எஸ்எஸ்எல்எஃப் நிறுவனத்திற்காகவும், சொத்து வாங்கிப் பதியும் அந்த குடும்பத்தின்காகவும் மகிழ்ச்சி பெருகியது. உள்ளே பிரார்த்தனைகள் ஓடின.

தொழில்கள் பெருகட்டும்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    மதுராந்தகம்
    09.03.2022

மலர்ச்சி

Malarchi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *