மணிமேகலை, காவிரிப்பட்டினம், மணிமாறன்

காவிரிப் பட்டினம், தொடிதோட் செம்பியன் மன்னன், பொதிகை அகத்திய முனி, இந்திர விழா, புகார் நகரத்து நாளங்காடி பூதம், சதுக்கப் பூதம், சித்திராபதி, மகள் மாதவி, தோழி வயந்த மாலை, சுதமதி, சோழ இளவரசன் உதயகுமாரன், யாழ் மீட்டும் எட்டிக்குமரன், அழகிற் சிறந்த மணிமேகலை, அறவணடிகள், வாரணாசி அந்தணர்கள், பசுவின் மகன், பசிப்பிணி தீர்க்கும் அட்சய பாத்திரம், இந்திரன் மண்ணிற்கு வருகை…  மணிமேகலைக் காப்பியத்தில் திளைக்கிறேன்.

சாவகத்தீவிற்கும் (இந்தோனோசியா – ஜாவா தீவு), மணிபல்லவத்தீவிற்கும் (இலங்கையின் நைனத் தீவு) எப்படி பறந்து போனார்கள்? கோமுகி பொய்கை எப்படி இருந்திருக்கும்? முற்பிறவி பற்றி அறிதலெல்லாம் அப்போதே எழுதியிருக்கிறார்கள், மாதவி வாழ்ந்த புகார் நகரம் அப்படி இருந்திருக்கிறது  என்றெல்லாம் வரும் நினைவுகளூடே, சீர்காழி வாழ் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறனும் வருகிறார். சரித்திர ஆதாரங்களை முன் வைத்து காவிரிப்பூம்பட்டினம் எனும் சங்க கால பெயரை மீட்டுக் கொண்டு வந்து அரசு ஆவணங்களில் சேர்ப்பதற்கு உதவியவராயிற்றே!

மணிமேகளை மீள் வாசிப்பு, மீள் வாசிப்பாக இல்லை, புதிய வாசிப்பாக புதிய புரிதலாக இருக்கிறது.

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
20.04.2022

#Manimegalai
#Puducherry
#Kaviripoompattinam
#Poombukar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *