‘பீஸ்ட்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தனது முந்தைய தாக்குதல் ஒன்றின் தொடர்பில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் போகும் சகல வித்தைகளும் தெரிந்த அசகாயசூர ‘ரா’ உளவாளி ஒருவன் காதல் தொடர்பினால் நகரின் வணிக வளாகம் ஒன்றிற்குள் நுழைந்த வேளையில், மக்கள் நிறைந்த அந்த வணிக வளாகத்தை
வல்லமை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினால், நம் உளவாளி தீவிரவாதிகளுக்கே தீவிரவாதியாக எழுந்து ‘பீஸ்ட்’ ஆக நின்றால் எப்படி இருக்கும், அதை சீரியஸ் காட்சிகளுக்கு நடுவே காமெடி கலந்து நெல்சன் தந்தால்… ‘பீஸ்ட்’

விஜய் அழகாக இருக்கிறார், பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார், அழகாக ஆடுகிறார், நன்றாக பாடுகிறார், எல்லாமும் வீணாகப் போகிறது இந்தத் திரைக்கதையில்.

பூஜா ஹெக்டே அழகு.  செல்வராகவன் நன்று. தொடக்கத்தில் வரும் பாடல், படம் முடியும் போது வரும் பாடல் என இரண்டிலும் அனிருத் நிற்கிறார், நடனம், காட்சிப்படுத்துதல் இரண்டும் நன்று.

அவ்வளவு வல்லமை பொருந்திய தீவிரவாதி, தன் நாட்டிற்கே திரும்பிவிட இருப்பதாக சொல்லும் இடத்திலும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் அந்தப் பாத்திரமும் விழுகிறது, படமும் விழுகிறது.

இந்திய அரசின் உயரதிகாரி, பணியின் போது நடந்த நிகழ்வு ஒன்றினால் உணர்ச்சி சமநிலை்இழந்து மனநல மருத்துவரிடம் போகிறார் என்னும் கதையமைப்பு, அல்லு அர்ஜூன் நடித்த முந்தைய தெலுங்குப் படத்தை அப்படியே கண் முன் கொண்டு வருகிறது.

சீரியஸ் ட்ராக்கில் காமெடி என்னும் ஒரே ஸ்டீரியோவாகவே பண்ணுவாரோ நெல்சன் என்ற கேள்வி எழுகிறது.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘பீஸ்ட்’ – நோயுற்ற வீரியம் குறைந்த பீஸ்ட். பார்க்கலாம்.

– திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *