கோவை வளர்ச்சிப்பாதை

🌸

மலர்ச்சி வணக்கம்!

பல ஆண்டுகளாக பலரும் விருப்பப்பட்ட முயற்சித்த
‘கோவையில் – வளர்ச்சிப் பாதை’ திடீரென முடிவாகி திரும்பிப் பார்ப்பதற்குள் நிகழ்ந்து முடிந்துள்ளது.

‘பணி நாளில் காலையில்’ ‘மாலையில் வைத்திருக்கலாம்’ ‘திடீர்னு சொல்றீங்களே!’ என பலரும் கேட்டதை அறிந்தோம். (கோவையில் வேறு நிகழ்ச்சிக்கு வந்தவன் விமானத்தை கொஞ்சம் ஒத்திப் போட்டதில் இது நடந்தது). இவற்றைத் தாண்டி…

புதுச்சேரி, சென்னை, பொள்ளாச்சி, சேலம், கோவை என பல இடங்களிலிருந்தும் இதற்காகவே காத்திருந்தோர் பாய்ந்து வந்தது சிறப்பு.

‘அதே பரமன், அதே சூப்பர் எனர்ஜி!’ ‘பத்து வருஷம் கழிச்சும் அப்படியே!’ ‘எத்தனை புக் படிச்சாலும் இப்படி ஒன்றரை மணி நேரத்துல இவ்ளோ எனர்ஜி் கிடைக்காதுங்க! வேற எப்படி கிளாஸுக்கு வர்றது!?’ ‘இன்னைக்கு முக்கியமான முடிவு எடுத்திட்டேன்’ ‘பல விஷயங்களுக்கு தெளிவு கிடைச்சது!’ என ஒன்றன் பின் ஒன்றாய் செய்யப்படும் பகிர்வுகள், ஒண்ணே முக்கால் மணி நேரம் வகுப்பு சக்தியேற்றியதை உறுதிபடுத்துகின்றன. அரங்கம், உணவு ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி!

( ‘பன்னீர் கட்டி பனியாரம்’ நன்று, அந்த ‘பாலக் தோசை’ அட்டகாசம்!)

‘பல ஆண்டுகளுக்குப் பிறகு பரமனின் வகுப்பில்’ என்பது வந்தவர்களுக்கு மகிழ்ச்சி! ‘பல ஆண்டுகளுக்குப் பிறகு நம் மாணவர்களை சந்திக்கிறோம், அவர்களுக்கு வகுப்பெடுக்கிறோம்!’ என்பது என் மகிழ்ச்சி!

எல்லாவற்றையும் ஈடேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!

(எல்லப்பனும் ரகுவும் தந்த ஆனந்தாஸ் மஸ்ரூம் பிரியாணி பார்சலோடு) விமான நிலையம் வந்து சேர்ந்து விட்டேன்.

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    கோவை விமான நிலையம்
    23.04.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *