‘டான்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘சார் படம் பண்ணலாம் சார்! உங்களுக்கு காலேஜ் டான் ரோல். பிரியங்கா மோகனையே இதிலயும் புக் பண்ணிடலாம் சார்!’

‘சரி, நான் அனிருத்தை கொண்டு வந்துர்றேன்! கதை?’

‘காலேஜ் கதை, இன்ஜினியரிங் காலேஜ், படிக்க கஷ்டப்படும் மாணவர்கள், அப்படியே ஜாலி கதை சார்!’

‘ அமீர்கான் த்ரீ இடியட்ஸ் பாத்தீங்களா? படிப்பு வராத மாணவர்கள், கண்டிப்பான காலேஜ் பிரின்சிபால்… அதை அப்படியே கொண்டு வந்துருங்க. பசங்க மனச பாக்கனும், டிகிரிய இல்லைன்னு அது மாதிரி மெசேஜ் சொல்லலனும்’

‘அத ‘நண்பன்’ன்னு பண்ணி ப்ரஃபசர் பேர கூட ‘வைரஸ்’ன்னு வச்சி தமிழ்ல கொண்டு வந்தாச்சு சார். அத அப்படியே எடுத்து இந்தப் படத்துல வச்சிருவோம் சார். எஸ் ஜே சூர்யா பண்ணிடுவார் அந்த ரோலை’

‘அதில ஒரு பையன் இஞ்சினியனிரிங் படிப்பு வராம அவங்க அப்பாவை எதிர்த்து ஃபோட்டோக்ராப்பி படிப்பானே, அதை கூட கொஞ்சம் மாற்றி கொண்டு வந்துரலாம்! கடைசியில அப்பா திருந்தற மாதிரி நல்லவரா காட்டிரலாம்!’

‘செஞ்சுருவோம் சார். சமுத்திரகனி சாரு அந்த ரோலை பண்ணட்டும். படம் முழுக்க வில்லன் மாதிரியே இருப்பார், கடைசியில ட்விஸ்ட் வச்சிருவோம் சார்!’

‘ரெண்டு அனிருத் பாட்டு, நல்ல டான்ஸ், அங்கங்க கொஞ்சம் சூரியோட காமடி, ரெண்டு ஃபைட், கடைசியில ஒரு மெசேஜ் இப்படிப் படம் போனா நல்லாயிருக்கும். இதில முடியுமா?’

‘சார்… இதிலயே சூரியைக் கொண்டாரேன் சார். கடைசியில ஒரு மெசேஜ் வச்சிட்டு படம் முழுக்க நீங்க சொன்னதை தெளிச்சிடறேன் சார். ‘யங்ஸ்டார்ஸ்’ எதை சொன்னாலும் சிரிப்பாங்க. லாஜிக் பாக்க மாட்டாங்க. ரெண்டு மூணு வாரம் தியேட்டர்ல கலெக்‌ஷன் பார்த்துட்டு ஓடிடிடியில வித்துர்றலாம். ஓடிடியில பாக்கும் போது எதிர்பார்ப்பு இருக்காது. நல்லாருக்குன்னு சொல்லிடுவாங்க! பண்ணிடுவோம் சார்!’

‘கடைசி பெஞ்ச் மாணவன் பெருசா வர போராடுவான்னு காட்டனும். ஆனா, கடைசி பெஞ்ச்ங்கறது ஒரு கிளாஸுக்கு ஒண்ணுதானே இருக்கும்! மொத்த காலேஜும் போராடனுமே?’

‘அதெல்லாம் யாரும் கவனிக்க மாட்டாங்க சார். கதையில சேர்த்து காமெடின்னு ஆக்கிட்டா கவனிக்க மாட்டாங்க சார்! பண்ணிடலாம் சார்!’

‘சரி, நானே தயாரிக்கறேன். ரெட் ஜெயண்ட்லயும் பேசறேன்! நீங்க சொன்ன கதை நல்லாருக்க மாதிரி தெரியுது. திரைக்கதையும் அதே அளவுக்கு பண்ணிருங்க சிபி!’

‘சரி சார்… படத்துக்கு பேரு ‘டான்’ன்னு வச்சிருவோம் சார்!’

….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *