மனித மலம் அள்ள ரோபோ – ஹோமோசெப் – சென்னை ஐஐடி

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழித்தார் எங்கள் தலைவர்!’ என்று ஆளாளுக்கு சரடு விட்டுக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் மனித கழிவுகளை அகற்ற உண்மையாகவே ‘ஹோமோசெப்’ என்றொரு ரோபோவை வடிவமைத்து தயாரித்து செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள்.

பெங்களூருவும், புனேவும், டெல்லியும் இதைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனவாம். தமிழகம் அதிக அளவில் பநன்படுத்திக் கொள்ளட்டும் இந்த தொழில்நுட்பத்தை.

மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலமும் ஒழியும், மலக்குழியில் உள்ளிறங்கி பணி புரிகையில் வாயு வெளிப்பட்டு உயிரிழப்புகள் நேர்வதும் தடுக்கப்படும்.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு பாராட்டுகள்!

போன தலைமுறை மக்கள் ரசித்த என் எஸ் கிருஷ்ணனின் பாடல் மனதில் வருகிறது.

‘விஞ்ஞானத்தை வளக்க போறேண்டி, மேனாட்டார விருந்துக்கு அழைச்சி காட்டப் போறேண்டி!’

வாழ்க!

– மணக்குடி மண்டு
09.06.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *