தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம்.

எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்.

இன்று காலை, பின் கதவு திறந்திருந்த ஒரு வாகனத்தின் பின்புறம் அந்தப் பணியாளர்கள் எல்லாம் வெட்கமும் வியப்பும் கலந்த முகத்தோடு  நிற்பதைக் காண நேரிட்டது.

ஒவ்வொருவராக வாகனத்தின் உள்ளே ஏறி வலப்புற முகப்பிலுள்ள இருக்கையில் அமர்கிறார்கள். எதிரில் நிற்கும் சீருடையணிந்த செவிலியர் அவர்களது விரலில் நாடி மானியை பொறுத்துகிறார்,
(ஓகோ… பல்ஸ், ஆக்ஸிஜன் பாக்கறாங க!)  கையை உள்ளே விடச் செய்து ரப்பர் உறையொன்றை அவரது  கெண்டை சதையின் மேல் பொருத்தி கையிலிருக்கும் விசையால் காற்றை அழுத்தி ரத்த அழுத்தம் பார்க்கிறார் (ஓகோ! பிபி செக் பண்றாங்க!)! .   தூரத்தில் கண் சோதனை செய்வதற்கான எல்லா அளவு எழுத்துக்களும் கொண்ட பலைகை இருப்பதை கவனிக்கறேன் ( ஓ… ஐ டெஸ்ட் கூட உண்டு போல).

செவிலியருக்கு இடப்புறம் உள்ளே உட்கார்ந்திருக்கும் வெள்ளைக் கோட் அணிந்த மருத்துவரொருவர் ஏதோ பரிந்துரைக்க, பத்து மாத்திரைகள் அடங்கிய ஸ்டிரிப்  ஒன்றை எடுத்து இவரிடம் தருகிறார் செவிலி.

ஒரு பெண் கையைப்பிடித்துப் பார்ப்பதாலோ, நம்மை ஒருவர் பரிசோதித்து மருந்துகள் தருகிறார்கள் என்ற எண்ணத்தாலோ, கூச்சத்தோடு சிரிக்கிறான் அவன் கீழே நிற்கும் தன் சக பணியாளர்களைப் பார்த்து. ‘அடுத்து நாங்க!’ என்பதை சிரிப்பின் வழியே சொல்லி நிற்கிறார்கள் இவர்கள்.

‘யாரு இது? ஏதோ மெடிக்கல் செக்கப்…  யாரு செய்யறா? தன்னார்வல தொண்டு நிறுவனம் ஏதும் செய்யுதோ!?’ என்ற நினைப்போடு வாகனத்தின் பக்கவாட்டுப் பக்கம் வருகிறேன்

‘தமிழக அரசு – கட்டுமான தொரிலாளர்கள் நல வாரியம்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து நிற்கிறேன்.

‘என்னது? நடமாடும் வாகனம் கட்டுமானத் தொழிலாளர்களுக்காகவா!? சூப்பர் திங்க்கிங்! அங்கங்க சைட்டுக்கே நேர்ல போய் நிறுத்தி சோதிச்சி மருந்து குடுத்துட்டு போயிடுவாங்க. அவன் பாட்டுக்கு வேலையையும் பாப்பான் ஹெல்த்தும் பாக்கப்படும்! சபாஷ்!’

வாகனத்திலிருந்து இறங்கி ஒரு ஸ்ட்ரிப் மாத்திரையோடு  போகிறவனுக்கு வாயெல்லாம் பல்!

நல்ல திட்டம்! வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
26.07.2022

#Tn #TNConstructionWorkersWelfareBoard #TNGovt #constructionworker

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *