அம்மா உண்கிறார் முதல் மிடறு

👏👏👏👏

‘போங்கடா நீங்க! இனிமே நானே என் கையால சுயமா சாப்டுக்கறேன்!’

( சாந்திதேவியாருக்கும் சிவாப்பையனுக்கும் உணவு புகட்டும் பாக்கியம் இனி இல்லை!)

இரு வாரங்களுக்குப் பிறகு வாய் – தொண்டை வழி உணவு சாப்பிடுகிறார் அம்மா. ✔️

👏👏👏👏

(கேன்டீனில் மிக்சியில் அடித்து வாங்கிய தயிர்சாதம் மதிய உணவாக )

….

‘தம்பீ’!’

‘சொல்லும்மா’

‘தோ அவ்ளோ சோறு தின்னுட்டு ஒரு தம்ளர் தண்ணி குடிச்சாதான் உடம்பு தெம்பா இருக்கும்!’

‘சரி, இனிமே சாப்பிடு!’

….

கேன்டீனிலிருந்து வாங்கி அடித்து கூழாக்கப்பட்ட தயிர் சாதம் டப்பாவை தருகிறோம்.

பார்த்த உடன் முதலில் சொன்னது, ‘இவ்ளோ வேண்டாம்டா தம்பீ!’

‘எவ்ளோ முடியுமோ, அவ்ளோ சாப்பிடு’

உணவைப் பிரித்து கையில் தருகிறோம், ‘சாப்டுருவாங்களா?!’ என்ற நினைப்புடன். ஸ்பூனால் முதல் கவளம் ( முதல் மிடறு!!!) எடுக்கப்படுகிறது.

hand – mouth co ordination happening well. முதல் மிடறு நடைந்தேறுகிறது. அடுத்த ஸ்பூன். இரண்டாம் மிடறு நடந்தேறுகிறது. ‘2 மணிக்கு ரேடியோலஜி டாக்டர பாக்கனும். நம்மளும் சாப்டுருவோம்!’ என நினைக்கையில்.

டப்பாவை கீழே வைக்கிறார் அம்மா. ‘ஏன் சாப்பட மாட்டறாங்க!? சாப்பாடு எறங்கலியா? இருமல் வரலியே!’

கேன்டீன் பார்சல் பையிலிருந்து சிறு சேஷேவை எடுக்கிறார்.

‘என்னம்மா?’

‘உப்பு இல்ல சாப்பாட்டுல!’

👏👏👏👏👏

ஓகோ… சுவை தெரிகிறது, உணவு உட்செல்கிறது!

👏👏

சபாஷ்!

பரமன்
குளோபல் சிட்டி
09.08.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *