ஒடிஸா – சிறு தானிய மிஷன் – சபாஷ்!

நீர்வளமில்லா மலைப் பிரதேசத்தில் விவசாயம் செய்ய, பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக்க, மலைவாழ் மக்களை தங்கள் பாரம்பரிய உணவை நோக்கித் திருப்ப, சுற்றுச் சூழல் காக்க என சில முடிவுகளோடு ஒடிஸா அரசு முன்னெடுத்த 5 ஆண்டு பரிசோதனையான  ‘ஒடிஸா சிறுதானிய மிஷன்’ 142 ஊராட்சி ஒன்றியங்களில் 1.5 லட்சம் விவசாயிகளால் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக சிறுதானிய பயிர் செய்து சாதித்துள்ளது.

அதிக நீர் உறிஞ்சும் நெல்லிலிருந்து  சிறுதானியத்திற்கு மாறி வாழ்வதாரத்தையும் பெருக்கி, மாநிலத்தின் மற்ற இடங்களையும் ஊட்டச்சத்து மாற்றுப் பயிர்கள் நோக்கி திருப்பச் செய்திருக்கிறது இந்த மிஷன்.

நீர்த் தேவை குறைவு, அதிகரிக்கும் வெப்பம், பூச்சித் தாக்குதல்கள் இல்லை, ரசாயன உரங்கள் தேவையில்லை, புயல் மழையிலும் நிற்கும் பயிர்கள், இரண்டு மாதங்களில் சாகுபடி என எல்லா வகையிலும் பயிரிடுவோர்க்கு உதவுகின்றனவாம் சிறுதானிய பயிர்கள்.

கவனிக்க வைத்திருக்கிறது ஒடிஸா அரசு. ஒரிஸா அரசுக்கும் இந்த மிஷனில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மலர்ச்சி வணக்கம்!

– பரமன் பச்சைமுத்து
11.08.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *