
காவிரி – கொள்ளிடம் – வீராணம் திறப்பு நீர் வந்து பாயும் வரை காத்திருந்தால் பருவம் போய்விடுமென்பதால், மணக்குடியில் எங்கள் வடக்குவெளி வயலில் நேரடி நெல் விதைத் தெளிப்பு தொடங்கி விட்டோம் இன்று. அழைத்துச் சொல்லி படத்தைப் பகிர்ந்தார் ஊரிலிருந்து சித்தப்பா.
படத்தில் விதை தெளிக்கும் பூராயர் அண்ணனின் காலில் கட்டு போடப்பட்டு இருப்பதைப் பார்த்து பதறி என்னவென்று விசாரித்தேன். வெட்டும் போது மண்வெட்டி பட்டு விட்டதாம்! 🙁
‘காவிரியில் ஃபுல்லா தண்ணி போவுதே, கொள்ளிடத்தில வெள்ளம் போவுதே!’ என்பவர்களுக்கு தமிழகத்தின் நீர்ப்பாசன அமைப்பு முறையும் ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு வாய்க்கால் – கண்ணி என்பதும், தலைமடை – கடைமடை என்பவை பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயிரம் கடினங்களைக் கடந்தும் விவசாயத்தை தொடர்கிறார்கள் ஊர்ப்புறத்து சிறுவிவசாயிகள் விவசாயத்தை விடும் மனம் இல்லாமல்.
இன்று பிபிடி ரக நெல் விதைக்கப்படுகிறது நம் வயலில். இது பூமியில் முளைத்து ஊன்ற ஒரு மழை வரட்டுமென வேண்டுகிறோம்!
வா மழையே வா!
– பரமன் பச்சைமுத்து
குளோபல் மருத்துவமனை,
பெரும்பாக்கம்
14.09.2022
#Manakkudi #Paddy #Agriculture #AgricultureLife #Paraman #CuddaloreDistrict #Chidambaram #Rain #RainWater