
‘கருமாரப்பட்டி எப்ப வந்த நீ கடைசியா?’ (மீனாட்சி)
‘தர்மலிங்கம் அப்பா இருந்தாரு அப்போ. பக்கத்துல நாய்க்கர் வீட்டில் உட்கார்ந்து கூட பேசினோம். இல்ல, அதுக்கப்புறம் ஒரு தடவ வந்தேன்!’ (பரமன்)
‘ரொம்ப நாளு ஆச்சு!’
‘ மங்கலட்சுமின்னு ஒருத்தவங்க இருந்தாங்களே! அவங்க எங்க?’ (பரமன்)
‘குன்றத்தூர்ல இருந்துச்சி. செத்துப் போச்சி!’ (செந்தாமரை)
‘செத்துட்டாங்களா? எங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாது!’ (அமிர்தம்)
‘உனக்கு அவங்கள தெரியுமா சிவா?’ (மீனாட்சி)
‘சோமாசிப்பாடிலேருந்து கருமாரப்பட்டிக்கு போன போது என்னை தன் தோள்ல தூக்கிட்டு நடந்தாரு தர்மலிங்கம் அப்பா. பக்கத்துல நடந்து வந்த்து எங்க அம்மாவும், மங்கலட்சுமியும்.
அப்புறம் கனப்பாபுரம் போனோம். மல்லாட்டை வெதைச்சிகிட்டு இருந்தாங்க தண்டபாணி மாமா (சிவகாமி, அருளின் அப்பா). சிவகாமி பம்பு செட் தண்ணி தொட்டியில தலை குப்புற வுழுந்துட்டுது. நான் கத்தி களேபரம் பண்ணி எல்லாரையும் வரவச்சேன். தூக்கனாங்க!
எதோ ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருந்தோம் நாங்க அப்போ!
ம்ம்… ஞாபகத்துக்கு வந்துருச்சி! கண்ணம்மா அத்தை, பொன்னம்மா அத்தை கல்யாணத்துக்கு வந்திருந்தோம் அப்போது’ ( பரமன்)
‘ஆமாம்! ஆமாம்!’ ( அமிர்தம்)
‘ஆமாம், கல்யாணம் திருணாமலையில நடந்தது’ ( மீனாட்சி)
‘ஓ…உனக்கும் ஞாபகம் இருக்கா? உன் வயசு என்ன?’ ( பரமன்)
‘இந்த அக்டோபர் 3 வந்தா 53’ ( மீனாட்சி)
‘ஓ… என்னை விட 4 வயசு பெரியவங்க நீங்க! எனக்கு 49’ ( பரமன்)
‘ம்ம்’ (மீனாட்சி)
‘அதுக்கப்புறம் பல வருஷம் கழிச்சி சிவசங்கரன் மாமாவோட பாட்டி செத்த போது சோமாசிப்பாடி வந்தேன். டைலர் குப்பன் அப்பதான் மறுபடியும் ஊருக்கே திரும்பியிருந்தார் செட்டிலாக. கரியன்னு ஒருத்தர் வீடு கூட இருந்தது. முத்து, குப்பன் (பழவந்தாங்கல்), சந்துரு எல்லாரோடயும் சுத்திட்டு இருப்பேன் நான். விபிசியில ‘அபூர்வ சகோதர்ர்கள்’ படம் பார்த்தோம் நாங்க. அப்போ கருமாரப்பட்டி வந்தேன்!’ (பரமன்)
….
பழைய நினைவுகளில் திளைத்தோம் எல்லோரும் சில நிமிடங்களில். காலையுணவிற்குப் பிறகு அவர்கள் தாம்பரம் கேம்ப் ரோடு நோக்கிப் பயணிக்க, நான் அலுவலகம் வந்துவிட்டேன்.
‘- பரமன் பச்சைமுத்து
20.09.2022