👏👏
என்ன நடக்கிறது இந்தியாவில்!
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தோம். ‘வெள்ளிக்கிழமை காலை 11.15க்கு நேர்முகம், 11க்கே சான்றுகளோடு வரவும்!’ என மின்னஞ்சல் வந்தது.
வெள்ளிக்கிழமை 10.45க்கு பாஸ்போர்ட் அலுவலகம் போனேன். சான்றிதழ் படிமங்கள் கேட்டார்கள். நகலெடுத்துக் கொண்டார்கள். என்னைப் படமெடுத்துக்கொண்டார்கள்.
ஞாயிறு காலை போலீஸ் வந்தார் தகவல் சரி பார்த்து உறுதிசெய்ய.
செவ்வாய் காலை பாஸ்போர்ட்டோடு என் வீட்டு வாசலில் போஸ்ட் மேன்! ஆமாம் புதிய பாஸ்போர்ட் வந்தே விட்டது!
3 நாட்களில் பாஸ்போர்ட் வருகிறது, அதுவும் நான் விண்ணப்பித்தது ‘எமர்ஜென்சி – ஸ்பீட்’ பிரிவில் இல்லை, ‘ரெகுலர்’ பிரிவில் விண்ணப்பித்திருந்தேன்!
சபாஷ்!
- பரமன் பச்சைமுத்து
20.09.2022