
‘பொதுவெளியில் மக்கள் பணி, மொழிப் பணி செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?’ என்று நானே கேட்டுக் கொண்ட என் கேள்விக்கு நாமே கொடுத்துக் கொண்ட உதாரணம் ‘ஐயா அவ்வை நடராசன்’ . கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என எதிரெதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும் மொழித்துறை, உலகத் தமிழ் மாநாடு என பெரும் செயலாற்றும் உச்சிப் பொறுப்புக்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது அவ்வை நடராஜன் அவர்களையே என்பது ஆகச் சிறந்த உதாரணம்.
‘தமிழ் உட்கார தன் நாக்கையே நாற்காலியாகக் கொடுத்தவன் இவன். விரல் நுனியில் இலக்கணம் இருக்கிறது. குரல் நுனியில் இலக்கியம் இருக்கிறது’ என்று நான் விரும்பும் கவிஞர் வாலி சொன்னதைத் தாண்டி என்ன சொல்லி விட முடியும்!
அமரர் உலகிற்குப் போய் வாருங்கள் ஐயா! உங்கள் தமிழ்ச் சொல்லாடல்களை, உங்களது தினமணி நடுப்பக்கக் கட்டுரைகளை இனி காண முடியாது. அவை என்றும் எங்கள் நினைவில்!
– பரமன் பச்சைமுத்து
சிதம்பரம்
22.11.2022
#AvvaiNatarasan #Anjali #RipAvvaiNatarasan