சோறு வைத்தால் மறுத்து ஓடும் நொறுக்குத்தீனி வைத்தால் ஓடி வரும் சிறு பிள்ளையைப் போலவே செய்கிறது தினமும் காலையில் பால்கனியில் பிஸ்கட் துண்டுகள் கொத்தியுண்ண வரும் காக்கை.
வைக்கும் சில பிஸ்கட் துண்டுகளை தின்றுவிட்டு அடுத்த நாள் மட்டுமே வரும் இப்பறவை, பிஸ்கட் தீர்ந்துவிட்டதே வெறும் (கையோடு!) அலகோடு அனுப்பக்கூடாதேயென்று சில துண்டுகள் மந்தைவெளி ‘சுஸ்வாத்’ வெண்ணை முறுக்குகள் வைத்தால், முழுநேரமும் இங்கேயே சுற்றி சுற்றி வருகிறது!
அட காக்கையே!
எப்போதும் கிடைப்பதில் இல்லை, எப்போதாவது கிடைப்பதே ஈர்க்கிறது, காக்கைக்கும் கூட
- பரமன் பச்சைமுத்து
29.12.2022