அப்பா…
தவறு சரி பார்க்காமல்
தன் பிள்ளைகளுக்காக
எதையும் செய்யும் சீவன்
இதயத்திலிருந்து எழும்பும் அன்பை
கழுத்துப் பகுதியில் கண்டிக்கும் வார்த்தையாக மாற்றியனுப்பும் கால எந்திரம்
தனக்கிணை ஒருவரும் தரணியிலேயேயில்லையென்று தலைகனத்து இறுமாந்திருந்தாலும்
தன் பிள்ளைகளிடம் தன்னையே பாரக்கும் முரண்
பெற்றோர் வைத்த தன் பெயரை காலாகாலத்துக்கும் நிற்கும் படி
பிள்ளைகளின் நெற்றியில் எழுதிப் போகும் தலை (தலைப்பெழுத்து) எழுத்தாளன்
வானகம் புகுந்த பின்னும்
உள்ளிருந்து
வாழும் உறவு
- பரமன் பச்சைமுத்து
மார்கழி – மிருகசீரிடம்
(அப்பா நினைவு தினம்)
05.01.2023
மணக்குடி