எதிர்பார்க்கிறேன்

நேற்று ஐபிஎல் டிக்கெட் பற்றி அதிமுக அமைச்சர் கேட்டதற்கு தந்த பதிலால் மட்டுமல்ல, ‘மாவட்டம் தோறும் விளையாட்டு திடல்’ என்ற அறிவிப்பால் மட்டுமல்ல, பதவி ஏற்றதும் ஒரிசா – பீகார் – வங்காளம் – டெல்லி என்று போய் முன்மாதிரிகளை பார்வையிட்ட போதே, மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த போதே தெரிந்து விட்டது உதயநிதி தன் பொறுப்புக் காலத்தில் நிறைய செய்துவிடுவார் என்று. அன்றே இதை குறிப்பிட்ட சில குழுக்களில் பதிவும் இட்டேன். என் எண்ணம் இன்னும் உறுதிப்படுகிறது இப்போது.

நாளை தலைமைப் பொறுப்பிற்கு செல்வதற்கு தன்னை நிரூபிப்பதற்கு ஒரு பொறுப்பாக உதயநிதிக்கு இது தரப்பட்டுள்ளது, அவரும் அதை நோக்கி நகர்கிறார், செயல்படுகிறார்.

மோடியின் ‘வந்தே பாரத்’ போல, உதயநிதி விளையாட்டு துறையில் புதியனவற்றை கொண்டு வருவார் என உறுதியாக நம்புகிறேன். இது உதயநிதிக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது. தமிழகத்துக்கும் நல்லது.

ராகுல் காந்தியைப் போல் இல்லாமல் சரியான செயல்காடுகளால் வளர்ந்து நிரூபிக்கப்படும் உதயநிதி!

எதிர்பார்க்கிறேன்.

  • மண்டு
    12.04.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *