கேள்வி: சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ள சிலைகள், தேவார செப்பேடுகளைப் பற்றி?
பரமன்:
பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.
இந்த செப்பேடுகள் பற்றி நாம் சொல்வது இருக்கட்டும். நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்லியிருக்கும் இரண்டு தகவல்களைக் கவனியுங்கள்.
“சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும் அவனது மகன் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன், செப்பேடுகளில் தேவாரப் பாடல்களை எழுதியதாக சிதம்பரம் கோயிலில் கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆகவே தற்போது கிடைத்துள்ள செப்பேடுகள் அவனால் எழுதப்பட்டதாக இருக்கலாம்’ என்றும், ‘தமிழ்நாட்டின் மீது பல முறை அந்நியர் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. மாலிக்காபூர் படையெடுப்பு, பிரெஞ்சு படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு என தொடர்ந்து சரித்திரத்தில் படையெடுப்புகளைப் பார்க்கிறோம். இப்போது கிடைத்திருப்பவை முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்பதால் மாலிக்காபூர் படையெடுப்பிலிருந்து இந்தப் பொருட்களைக் காக்க புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம்’ என்றும் சொல்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
புதிய கதவுகள் திறக்கின்றன.
( சீர்காழி கோவிலில் அந்த செப்பேடுகள் கிடைக்கப்பெற்ற அந்த இடத்திற்கு ‘திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ் மண்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டாடுகிறார் தரும்புரம் ஈ
ஆதீனம் என்பது இதை நாம் எழுதிக் கொண்டிருக்கும் போது வந்த செய்தி )
– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.04.2023
#ValarchiTamilMonthly
#Valarchi #Paraman