நம்மை நேரியத்தில் வைத்திருக்கும் ஓரிடத்தில், நமக்கு உற்சாகமும் தெளிவும் தரும் ஓரிடத்தில் நம்மை இணைத்துக்கொள்வது நமக்கு பெரும் வளர்ச்சியைத் தந்து நம்மை தொடர்ந்து வழி நடத்தும். மலர்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதமாக தொடர்ந்து வரும் ‘வளர்ச்சிப் பாதை’ அதை செய்துகொண்டே இருக்கிறது.
கடந்த வாரம் திருவண்ணாமலையில், இந்த வாரம் புதுச்சேரியில் நிகழ்ந்த ‘வளர்ச்சிப் பாதை’கள் வந்திருந்த மலரவர்களுக்கு நிறைய அள்ளித் தந்தது என்று அறிந்து கொள்ள முடிகிறது.
‘காலையிலேருந்து வீட்டுல என்ன பிரச்சினை நடக்குதோ, அதையே வளர்ச்சிபாதையில் எடுத்து அதுக்கு தீர்வும் தந்தீங்க பரமன்!’ ‘என் ஆஃபீஸ்ல நடக்கற டீம்ல நடக்குற பெரிய குளறுபடிகளுக்கு சூப்பர் தீர்வு கெடைச்சது இந்த வளர்ச்சிப் பாதையில்!’ ‘மெண்டல் ஸ்ட்ரெஸ், நிம்மைதியின்மை… இதுக்கெல்லாம் புட்டு புட்டு தெளிவா தீர்வு வச்சாச்சி! நன்றி பரமன்!’ என வகுப்பிற்குப் பின்பான பகிர்வுகள் வந்துகொண்டே இருக்கின்றன இன்னும்.
‘பரமன் நன்றி! அந்த நிலையில் மலர்ச்சி கோர்ஸ் பண்ணினேன். இன்று வரை என்னை தூக்கி நிறுத்துது. இதோ ஸ்பைஸ் செட்டில் செக்யூரிட்டி ஆஃபீசராக ஆகி நிற்கிறேன் நன்றி!’ என்ற மலர்ச்சி மாணவரின் பகிர்வு கூடுதல் உற்சாகத்தை தந்தது.
இதுவரை எந்த பொறுப்பிற்கும் போகாத பேராசிரியர், கல்லூரியில் நடந்த பெரிய முக்கிய தேர்தலில் போட்டியிட்டு அறுதிப்பெரும்பான்மையோடு வென்றுவிட்டு வந்து, ‘பொறுப்பெடுக்க வைத்ததும், மிகச்சரியாய் நேர்மையாய் உறுதியாய் செயல்பட வைத்ததும் என்னுள் இருக்கும் மலர்ச்சியே! எல்லாவற்றிக்கும் மலர்ச்சியே காரணம்!’ என்று திருவண்ணமலை வகுப்பில் பகிர்ந்தது, இன்னும் கண்களில் நிற்கிறது. மலர்ச்சி ஒரு ‘சக்தி’, தூண்டுகோல், வழிகாட்டி. அவருடைய நடத்தை, நற்பண்புகள், செயல்பாடுகள், உழைப்பு, இறையருள் ஆகியவைதான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தவை. ஆனாலும் ஆசிரியனாக நெஞ்சு விரிய பெருமிதம் கொள்கிறேன், மாணவரின் வெற்றிகளைக் கண்டு.
புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்து இங்கு வாழும் திருவண்ணாமலை மலர்ச்சி மாணவி பிரதியுக்ஷா, புதுச்சேரி வளர்ச்சிப் பாதைக்கு பெரும் உற்சாகமாக வந்திருந்தார். வகுப்பில் கலந்து கொண்டு இன்னும் மகிழ்ச்சியோடும், கூடுதல் தெம்போடும் போனார். (‘பாண்டியில இருக்கப் போறே, இனிமே அங்கேயே வளர்ச்சிப் பாதை வகுப்பு அட்டென்ட் பண்ணு!’ என்று மகளிடமும், ‘பரமன்! இன்னிக்கு வளர்ச்சிப்பாதைக்கு பிரதியுக்க்ஷா வரலாம்தானே? அனுமதியுங்கள்!’ என்று குறுஞ்செய்தி மூலம் என்னிடமும் கேட்ட தாய் தீபாவுக்கு முதல் பூங்கொத்து!)
‘ஆன்மீகத்தின் ஆழம் பொதிந்த சிந்தனைகள், அலுவலகத்தை நிர்வகிக்க தேவையான சங்கதிகள், தொழிலைப் பெருக்க உதவும் விதைகள், மனவுளைச்சலை வேரோடு அறுக்க உத்திகள், வாழ்வியலுக்கான தெளிவு, ஒரு மாதம் முழுதுக்கும் தேவையான சக்தி என எல்லாமும் கிடைத்து விடுகிறது ஒன்றரை மணி நேர வளர்ச்சிப்பாதையில். நன்றி பரமன்!’ என்று காதில் சொல்லிவிட்டுப் போனார் புதுச்சேரியின் தொழில் முனைவோர் ஒருவர்.
‘குருஜி! ஐ ஆம் கிரேட்ஃபுல்! வந்தவர்களுக்கு கிடைத்தது எவ்வளவு என்று சொல்ல முடியாது. வாரதவர்கள் இழந்தது எவ்வளவு என்று அவர்களுக்கு தெரியாது!’ என்று மலர்ச்சி குழுவில் பதிவு இட்டிருந்தார் மகேஷ் சோனி. ஆமோதிப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அடுத்த வாரம் சிதம்பரம்!
தொடர்ந்து வளர்வோம்! இறைவன் துணை செய்வான்!
வாழ்க! வளர்க!
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
18.05.2023