கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

பாலாசோரில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் நற்கதியடைய பிரார்த்தனைகள்.

விபத்து நடந்த இடத்திற்கு உடனே போய் வெளிச்சமில்லா இருட்டில் மொபைல் ஃபோன் விளக்கில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் கரம் தந்த உள்ளூர் மக்களும், காயம்பட்டு மருத்துவமனையில் அவசரப்பிரிவில் கிடப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்க தாமாகவே குவிந்த அந்த உள்ளூர் மக்களும் நெஞ்சம் நனைக்கிறார்கள்.   அவர்கள் வாழட்டும், அவர்கள் வழியே மனிதம் வாழட்டும்!

உடனே களத்தில் இறங்கிய தமிழக, ஒடிசா அமைச்சர்கள், அனைத்து அதிகாரிகளும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்.  பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக அதானி, கிரிக்கெட் வீரர் சேவாக் போன்றோர் அறிவித்திருக்கின்றனர். நல்லது.

நடந்து விட்டது பெரும் விபத்து. பாதிக்கப்பட்டோர் நலம் பெறட்டும், வரும் காலங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை நுட்பங்கள் வலுவாக வரட்டும்.

பிரார்த்தனைகள்!

– பரமன் பச்சைமுத்து
05.06.2023

#odisha #BalasorTarinAccident #CoromandelExpress

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *