சிறப்பு வளர்ச்சிப்பாதை ஆன்லைன் கனெக்ட்

சிங்கப்பூர், யுஎஸ், யுகே, திருவண்ணாமலை, கடலாடி, செங்கல்பட்டு, குடியாத்தம், காட்பாடி, வேலூர், கல்லுப்பட்டி மதுரை, திருப்பூர், கோவை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், பெங்களூர், குஜராத்தின் வதேரா, மயிலாடுதுறையின் கோமல், திருக்கோவிலூர், சங்கரன் கோவில், திருநெல்வேலி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், உத்திரமேரூர், திருச்சி ஸ்ரீரங்கம், பொள்ளாச்சி, என பல இடங்களிலிருந்தும் 218 மலரவர்கள் இணைய அட்டகாசமாக நிகழ்ந்தேறியது ‘சிறப்பு வளர்ச்சிப்பாதை ஆன்லைன் கனெக்ட்’ நேற்று காலை.

வெற்றிக்கான காரணிகள், முக்கிய நான்கு அடிப்படைகள், பயணிக்க வேண்டிய திசை, கொள்ள வேண்டிய புரிதல்கள் என மலர்ந்த விரிந்த வளர்ச்சிப்பாதை, இவற்றைத் தாண்டி
ஞாயிறு காலை மலர்ச்சி வகுப்பு என்பதன் மூலம் வாரம் முழுவதுக்குமான சக்தியேற்றம் தந்தது.  குஜராத்திலிருந்து அமிராமி, கோவை செல்வபுரத்திலிருந்து பொன்னுஸ்வாமி, வேலூர் காட்பாடியிலிருந்து நரசிம்மன் ஆகியோர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் இதை உறுதி செய்கின்றன.

‘சார்! ஞாயிறு காலை 8ங்கறது, பர்சேஸ் பண்ண போற முக்கிமான நேரம் சார். ஆனா இதைவிட என்ன சார் முக்கியம்? வளர்ச்சிப்பாதை முடிச்சிட்டு போறோம் பர்ச்சேஸுக்கு!’ என்கிறார் திருவண்ணாமலை பேராசிரியர் டாக்டர் ரவி.   இந்த ஞாயிறோடு முடியவில்லை, ஜூனின் மொத்த 4 ஞாயிறுகளுக்கும் வளர்ச்சிப் பாதை தொடரும் என்றதும் தன்னிச்சையாக கைதட்டி குதித்த கவிதா, புதுவை ஏழுமலை, அனுசூயா, ஆர்த்தி, மோகன்ராஜ், ஞானபிரகாஷ், சுதன்ராம், வேலூர் நவீன் போன்றோரின் மகிழ்ச்சியை எண்ணி மகிழ்கிறேன்.

பெரிய திரையில் நேரலை வகுப்பை இணைத்து விட்டு ஒரு கூட்டமாக நேர் வகுப்பில் அமர்வது போலவே அமர்ந்து கற்ற சிதம்பரம் பேட்ச் 64 மாணவர்களை பாராட்டுகிறேன். வைதேகியின் கற்றல் நன்று.

காரில் பயணித்துக் கொண்டே வகுப்பில் கற்ற சந்திரசேகரின் ஆர்வத்தை மதிக்கிறேன்.

கற்கை நன்றே, கற்கை நன்றே,
ஆன்லைன் வழியேயும் மலர்ச்சி வகுப்பில் கற்கை நன்றே!

அடுத்த ஞாயிறு காலை 8 மணிக்கு அடுத்த வளர்ச்சிப்பாதையில் சந்திப்போம்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
05.06.2023

#ValarchipPaathai #MalarchiOnline #ParamanOnline #OnlineClass #Malarchi
#பரமன் #பரமன்பச்சைமுத்து #Malarchi #ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #LifeCoach
#Motivational #MotivationalSpeaker #LifeTeacher #TamilMotivational

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *