சென்னை காவல்துறை இந்தியாவில் முதல்முறையாக…

சென்னை காவல்துறை செய்திருக்கும் இந்த முன்னெடுப்பு, வரப் போகிற பல முன்னேற்றங்களுக்கு புதிய மைல் கல் ஆக இருக்கும்.

இந்தியாவில் முதன் முயற்சியாக சென்னையில், மிக நுட்பமான கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பம் காவல் கண்காணிப்பு பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முகத்தை கண்டறியும் (‘ஃபேஸ் டிடெக்டிங் கேமாரா’) தகவமைப்பு  கொண்ட கேமராக்கள் என்பதால் பல சிக்கல்களை அவிழ்க்கவும் இதை பயன்படுத்த முடியும்.

நெரிசலான இடங்களில் கண்காணிப்பு, தப்பியோடும் குற்றவாளியை கண்காணிக்க, கடலலையில் உயிருக்குப் போராடுபவரை கண்டறிய என சில செயல்பாடுகளுக்கு இவை உதவும் என்று இன்று கருதுகிறார்கள். இவைகளைத் தாண்டி, இந்த தொழில்நுட்பம் நாளைய பலவற்றை எளிதாக்கி விடும் என்பது நம் நம்பிக்கை.

காவல்துறைக்கு வாழ்த்துகள்!

– பரமன் பச்சைமுத்து
30.06.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *