தலைவா! #Thalaiva #Wimbledon

wp-1688525934247.jpg

விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ஃபெடரர் கௌரவிக்கப்பட்டதும், மனைவியோடு எழுந்து நின்று அவர் அதை ஏற்றதும் சிறப்பான தருணங்கள். ஆனால், அதைத் தாண்டியவொரு தருணம் காண்கிறேன் நான் இப்போது! ‘வாட்! அட! ஒஓஓஒ! ஊவ்!’ என்று நிற்கிறேன்!

‘பாட்ஷா’ திரைப்படத்து இடைவேளை பின்னணி இசை ஓடுகிறது மனதில்.

எத்தனை பேர் வந்தாலும் ரோஜர் ஃபெடரெர்தான் இன்று வரை டென்னிஸின் கடவுள். விம்பிள்டன் ஒற்றையரில் இன்றுவரை அதிகமுறை சாம்பியன் ஃபெடரர்தான்.  

விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ஃபெடரர் கௌரவிக்கப்பட்ட படத்தை  தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது விம்பிள்டன். அதில் ஃபெடரரை குறிக்க அவர்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தையை பாருங்கள், என் வியப்புக்கு காரணம் புரியும்.

அந்த வார்த்தை : THALAIVA #wimbledon

தலைவா!

– பரமன் பச்சைமுத்து
05.07.2023

#Thalaiva #Federer #Rajini #SuperStarRajini #Wimbledon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *