‘விமானமேறும் முன் முடித்துவிடுவோமே!’ என்று ஒதுங்குமிடத்திற்குள் ஒதுங்க நுழைகையில், முகப்கில் யாரிடமோ செல்லிடப் பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை நிறுத்திவிட்டு நம்மிடம் வருகிறார்.
‘பரமன் சார்!?’
‘எஸ்!’
‘சார்… நான்….!’
‘அடடா! ஆகா!’
‘கத்தார்லேருந்து எறங்கி கோவை போறேன்!’
‘வாங்க! அதே ஃப்ளைட்லதான் நானும்!’
நான் எழுதிய ‘உண்மையான மகளிர் தினம்’ என்ற கவிதையை மிகப்பெரிய பலகையில் வைத்து தனது உணவகத்தின் எல்லாக் கிளைகளிலும் முகப்பில் வைத்து என்னை ஆடிப் போகச் செய்தவர் இவர். ‘ஒன்லி காஃபி’ என்று தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் இவர் தொடங்கிய நிறுவனம் இன்று பல இடங்களில் பரவி நிற்கிறது. சமீபத்தில் பெரம்பலூரில் திறந்தார்கள். தரும் தரத்தால் உறுதியாக காலூன்றி நிற்கிறது இவரது ‘ஒன்லி காஃபி’.
கோவையை நோக்கி நாங்கள்
- பரமன் பச்சைமுத்து
சென்னை விமான நிலையம்
15.07.2023